தப்பியோடிய காதல் ஜோடி.. காதலனின் வீட்டை எரித்து நாசமாக்கிய பெண் வீட்டார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியை பகுதி சார்ந்த சிவா மனைவி பாரதி இவருடைய மகள் அக்ஸயா(19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகன் விஜய் (25) . இந்நிலையில் விஜய்யும் அக்ஸயாவும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் விஷயம் அறிந்த பெற்றோர்கள் காதலர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விடியற்காலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதைத்தொடர்ந்து பெண் வீட்டார் பெண்ணை பல்வேறு இடங்களையும் தேடி உள்ளனர்.
பின்னர் காதலர்கள் இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் வீட்டார் விஜய்யின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக வீட்டில் மளமள வென தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
மேலும் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்த அக்ஸாயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!