குடும்பமே எதிர்த்த தம்பியின் காதல்... திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த யோகி பாபு!

 
யோகி பாபு

யோகி பாபு தமிழ் சினிமாவில் மிகவும் போராடி வளர்ந்து வந்த முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கதையின் நாயகனாக நடிப்பேன் என்று கூறி மற்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். நடிக்க வாய்ப்பு தேடி வந்த காலங்களில் சாப்பாட்டுக்குக் கூட சிரமப்பட்டார். ஆனால் இன்று சென்னையிலேயே பல இடங்கள், வீடுகள் உள்ளன. கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

நடிகர் யோகி பாபு 2020 இல் பார்கவியை திருமணம் செய்து கொண்டார், இப்போது தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு கூட யோகி பாபு தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார்.இதைத் தொடர்ந்து யோகி பாபு வீட்டில் இன்னொரு விஷேசமும் நடந்துள்ளது. நடிகர் யோகி பாபுவின் தம்பி விஜயன், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மைசூர் பெண்ணை காதலித்து வந்தார், இந்நிலையில் யோகி பாபுவே திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார் விஜயன். மேலும் யோகி பாபுவின் கால்ஷீட் உள்ளிட்ட பணிகளை விஜயன் தான் கவனித்து வருகிறார். இவர் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணை சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்தனர். படுகர் சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் யோகி பாபு அந்த பெண்ணின் குடும்பத்தாரை நேரடியாக தொடர்பு கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் ஜூன் 3ஆம் தேதி யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாற்றில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

 

From around the web