காதல் தோல்வி.. விரக்தியில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு விபரீத முடிவை எடுத்த இளைஞர்!

 
சந்தோஷ்

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் உள்ள முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). சந்தோஷ் தனது மூத்த சகோதரனின் மனைவியின் தங்கையை காதலித்து வந்தார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சந்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் "நான் ஒரு பைத்தியக்கார காதலன், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த முட்கல் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web