முதியோர் இல்லத்தில் காதல்... 70 வயசில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!
காதலுகு வயசில்லைன்னு சொல்வாங்க. அன்பும், ஆதரவும் வேண்டி ஏங்கி கிடக்கிற முதியோர்களை நிராதரவாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிற தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில், முதியோர் இல்லத்தில் சந்தித்து, பேசி பழகி 70 வயதில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோடி, வயசானாலும் காதல் எப்போதுமே இளமையாக தான் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் ஒன்றில் 70 வயதுடைய முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது. 72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70 வயதான சரஸ்வதி ஆகியோருக்கிடையே, காதல் மலர்ந்து திருமணம் மூலம் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், நல்ல நட்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.இந்த நட்பு காலப்போக்கில் ஆழமான காதலாக மாறி, இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது. இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என கோவிந்தன் நாயர் உருக்கமாகத் கூறியுள்ளார். சரஸ்வதி அம்மாவும், இந்தத் திருமணம் எங்கள் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை அளித்துள்ளது என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
