எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. இளம்பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்த குடும்பத்தினர்!

 
ராஜஸ்தான் இளம்பெண்

24 வயது இளம்பெண் ஒருவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக ரவி பீல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த காதல் ஜோடி பல்வேறு இடங்களில் தங்கி உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் ஜோடி வங்கிக்கு வரப்போவதாக பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கு காத்திருந்து, கணவரின் கண் முன்னே மனைவியை காரில் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அப்பெண்ணை  கொன்று உடலை எரித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், பெண்ணின் உடல் 80 சதவீதம் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் தலைமறைவாகி இருக்கும் பெண்ணின் குடும்பத்தாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web