அதிர்ச்சி!! நைசாக பேசி +2 மாணவியுடன் உல்லாசம்!! இளைஞரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
மாணவி

இன்றைய காலகட்டத்தில்  பெரும் குற்றங்கள் மொபைலால் தான் அரங்கேறி வருகின்றன. சிறு குழந்தைகள் கையில் போனை கொடுக்காமல் இருந்து வந்த பெற்றோர் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புக்காக மொபைலை கொடுக்க வைத்தது. தற்போது சமூக வலைதளங்களில் பிசியாகி விட்டனர். அருகில் இருக்கும் பெற்றோர் தூரமாகி விட்டனர். எங்கேயோ இருக்கும் நண்பர்கள் அருகில் வந்து விட்டனர். இளைய தலைமுறையினர்  பெற்றோர்கள் கூறுவதை கண்டு கொள்வதே இல்லை.

இவர்களின் அலட்சியத்தால் பல நேரங்களில் விபரீதங்களில் சிக்கி விடுகின்றனர். அப்போது பெற்றோரை தேடி ஓடி வருகின்றனர் . இன்னும் ஒரு படி மேலே போய் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அன்பரசன்(27). எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கும் இவர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், அன்பரசன், அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியின் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மறுமுனையில் மாணவி தொடர்பு கொண்டு அன்பரசனிடம் பேசினார். எதிர் முனையில் அன்பரசன் இனிமையான குரலில் பேசி மாணவியை மயக்கியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

மாணவி

பின்னர் சிறுமியிடம் காதல் வலை வீசி அன்பரசன் பேசியுள்ளார். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியின் வீட்டிற்கு வந்த அன்பரசன் சென்றுள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தார்.

அதன்பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தார். இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் வீட்டின் பின்புறம் நின்று கொண்டு அன்பரசன் பேசிக் கொண்டிருந்தார். இதை மாணவியின் பெற்றோர் பார்த்துவிட்டனர். இவர்களை கண்டதும் அன்பரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மாணவி

பின்னர் மகளிடம் விசாரித்தபோது அவரை காதலிப்பதாகவும், ஒன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அன்பரசன் குறித்து விசாரித்தபோது, அன்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், இதை மறைத்து மாணவியுடன் பேசி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web