அதிர வைத்த சைக்கோ.. காதலியுடன் உல்லாசத்தில் மிளகாய் பொடி தூவி கொடுமை!

 
அம்ரித் பாய்

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிகுன்ஞ் குமார் அம்ரித் பாய் பட்டேல் என்ற இளைஞர் அதேபகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில் அம்ரித்க்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை மறைத்து அப்பெண்ணை அம்ரித் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், அம்ரித்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விவகாரம் சமீபத்தில் தான் காதலிக்கு தெரிய வந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், காதலனுடன் சண்டை போட்டுள்ளார். தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறி அவரை விட்டு இளம்பெண் பிரிந்து சென்று விட்டார்.

அம்ரித் பாய்

காதலியுடன் அம்ரித் பேச முயன்றும் அவர் மறுத்து விட்டார். இது அம்ரித்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் இருந்த அம்ரித் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். எனினும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, அம்ரித் கேபிள் வயர் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு நில்லாமல் அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி விட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் அந்த பெண் பெரும் கொடூமையை எதிர் கொண்டுள்ளார். பின்னர் இது குறித்து வெளியே சொன்னால் நாம் தனிமையில் உல்லாசமாக போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன எனக் கூறி மிரட்டியுள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடுமைகளை அப்பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.

அம்ரித் பாய்

கடுமையாக காயங்களுடன் இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web