ச்சீ... சுற்றுலாதலத்தில் பொதுவெளியில் அத்துமீறிய காதலர்கள்!

 
காதல் அத்துமீறல் அட்ராசிட்டி காதலர்கள் காதல் அத்துமீறல் அட்ராசிட்டி காதலர்கள்

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படுவது மகாராஷ்டிரா மாநிலம் புனே தான். புனேயில் சுற்றுலாதலமான பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இளம் ஜோடி இருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். இது குறித்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படம் புனேயின் பண்பாட்டை அழிப்பதாகவும், நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திடம் பொறுப்பு கேட்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம், பொது இடங்களில் நடத்தை மற்றும் புனே மாநகராட்சி  மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி  இவற்றின் ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் குறித்து  பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

இந்த புகைப்படத்திற்கு   பிம்ப்ரி-சின்ச்வாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரசாந்த் ராவுல், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் PCMC ஆணையர் ஷேகர் சிங் ஆகியோரை டேக் செய்து, “உங்கள் கனவு நனவாகிறது. இது போதை பொருள் பயன்படுத்துவோர், குடிகாரர்களுக்கு ஏற்ற இடம், மற்றும் தொழில்முறை விபச்சாரத்திற்கும் பயன்படலாம்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.  

காதல்

மற்றொரு  பயனர், “ஏழை மக்களால் லாட்ஜ் மற்றும் OYO அறைகளின் விலைகள் அதிகம்.  முன்னாள் மேயராக இருந்த முரளிதர் மொஹோல் இந்த பொது இடத்தில் அனுமதி அளித்துள்ளார். அதனால் தான் அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்” என கேலியாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் மிகக் கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?