”ப்ளீஸ், எங்கள மன்னிச்சிடுங்க”... ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி ... வைரல் வீடியோ!.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி அதிவேகமாக பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. காதல் ஜோடி பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு பைக்கில் சென்று இருந்தனர். அங்கு அந்த சமயத்தில் வந்த ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்தார். அந்த பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அபாயத்தை உணராமல் காதலரை கட்டியணைத்து அமர்ந்து கொண்டிருந்தார். பின்னாடியே வந்தவர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும் கூட இருவரும் காதல் மயக்கத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தும் சென்றார்கள். உடனடியாக வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ‘இந்த வீடியோ கொட்டாவை சேர்ந்தது’ எனவும் ட்வீட்டியிருந்தார்.
आज इनकी वज़ह से खूब चर्चा में रहा #कोटा #राजस्थान !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) May 23, 2024
ये मोटरसाइकिल वाले सड़क छाप सड़क पर अश्लीलता फैलाने वाले लैला-मजनू !!
पुलिस के हत्थे चढ़ने के बाद कान पकड़कर माफी मांग रहे हैं !!#viralvideo
सोशल मीडिया पर आज सबसे ज्यादा वायरल होने वाले वीडियो !! #trendingvideo pic.twitter.com/hgPCIo7oOd
உடனடியாக அந்த வீடியோவை பார்த்த கொட்டா காவல்துறையினர் “இந்த வைரல் வீடியோவின் பின்னணியில், IPC பிரிவு 294A இன் கீழ் வழக்கு எண் 122/24 பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பைக்குடன் கைது செய்து விசாரணை நடத்தினர்”
காதல் ஜோடியை காவல்துறையினர் மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். வீடியோவில் மன்னிப்பு கேட்ட காதல் ஜோடி ” இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். மோட்டார் சைக்கிளில் அப்படி சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இனி இதுபோன்ற செயல்களை பொது இடங்களில் செய்ய வேண்டாம். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” எனவும் கூறியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
