ஷாக்... 'கூ’ ஆப் முற்றிலுமாக நிறுத்தம்.. திடீர் அறிவிப்பு!

 
கூ  ஆப்

2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் X தளத்திற்கு எதிரான வலுவான கருத்து இருந்தது. பின்னர் இந்தியாவின் தயாரிப்பான கூ  ஆப் வெளியே வந்தது. X தளத்தைப் போலவே, பயனர்களும் அதில் இடுகைகளைப் பகிரலாம். கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தத் தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அந்த ஆண்டு ஜூலையில் 94 லட்சம் பேர்  கூ ஆப்பை பதிவிறக்கம் செய்தனர்.

இந்நிலையில் படிப்படியாக பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வந்தது. இதன் விளைவாக, நிறுவனம் நிலையான வருவாயை உருவாக்கத் தவறிவிட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கூ தரப்பும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் சமூக வலைதளமான கூ தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2022ல், சமூக வலைதளமான X க்கு மாற்றாக தன்னை முன்வைத்த 'கூ ' என்ற நிறுவனம், முதலீடு தொடர்பான பிரச்னைகளால், தனது சேவையை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அபர்மேயா ராதாகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரிய இணையதள நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதை தொடர்ந்து நடத்த, கூவுக்கு பெரிய முதலீடு தேவைப்படுகிறது. ஆனால்,  அதைச் செய்வதற்கான வழிகள் இல்லை, நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web