இன்று சந்திரகிரகணம் .... கோவில்களில் நடை அடைப்பு!!

 
கிரகணம்

2023ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று  நள்ளிரவு 11.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதாவது 29-ம் தேதி அதிகாலை 3.36 மணி வரை நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வட-கிழக்கு தெற்கு அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக், அன்டார்ட்டிக்கா பகுதிகளில் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணம்

சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில், இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் இகழும் என ஜோதிடம் கூறுகிறது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழும். ​​பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் தோஷ காலமாக கருதப்படுவதால் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களில் நடைகளும் சில மணி நேரமும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரவு 7 மணி முதலே அங்காங்கே கோயில் நடை சாத்தப்பட உள்ளது.பழனி முருகன் கோயிலில் இரவு 8 மணிக்கும், திருப்பரங்குன்றம் கோயிலில் 7 மணிக்கும், சமயபுரம் கோயிலில் 6 மணிக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மாலை 5.30 மணிக்கும், பண்ணாரி அம்மன் கோயிலில் 6 மணிக்கும்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இரவு 10 மணிக்கும் நடை சாத்தப்பட உள்ளது.

அடேங்கப்பா!! மிஸ் பண்ணாதீங்க!! வரும் வெள்ளிகிழமை 5  மணி நேரம் நீடிக்குமாம்!! இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!!

இதேபோல் அனைத்து கோயில்களில் தரிசனம் மற்றும் பூஜை நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்கள் கோயில் செல்வதை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.தொடர்ந்து நாளை (அக்டோபர் 29)சந்திர கிரகணம் முடிந்ததும் கோயில்கள் சுத்தம் செய்யப்படும். தொடர்ந்து அதிகாலை  5 மணியளவில் நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web