நாளை சந்திர கிரகணம்!! இதையெல்லாம் மறக்காம செய்திடுங்க!!

 
சந்திர கிரகணம்

நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.45 மணி முதல் மே 6ம் தேதி அதிகாலை 1.02 வரை நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 20ம் தேதி அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம்  ஏற்பட்டாலும் அது இந்தியாவில் தெரியவில்லை.  சூரிய கிரகணத்தை அடுத்து உடனடியாக  சந்திர கிரகணங்கள் ஏற்படுவது வழக்கம் தான் .  அந்த வகையில் தற்போது மே 5 பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.  

சூரிய கிரகணம்.. கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தா?
இந்திய நேரப்படி பெனும்பிரல் சந்திர கிரகணம் மே 5-ம் தேதி இரவு 8.45 மணி மற்றும் மே 6-ம் தேதி அதிகாலை 1.02 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்திரன் பூமியின் நிழலைக் கடந்து செல்லும் போது  சந்திர கிரகணம் ஏற்படும் . சூரிய கிரகணத்தை காட்டிலும் சந்திர கிரணம் உலகின் பல பகுதிகளில் தெரியும். சந்திரன் பெனும்ப்ரா எனப்படும் பூமியின் நிழலின் வெளிப்புற பகுதிக்குள் ஆழமாக செல்லும் போது ஏற்படுவதால்  இது ஒரு அரிய கிரகணம் ஆகும். இதே போல் மீண்டும் ஒரு கிரகணம்  அடுத்த 19 ஆண்டுகளுக்கு பின் தான் நிகழும் என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள்  கூறியுள்ளனர்.   நாளை நிகழப் போகும் இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்டிகா நாடுகளில் வாழும் மக்கள் சந்திர கிரகணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் காணலாம்.  ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கிரகணத்தை காண முடியாது. இந்தியாவை பொறுத்தவரை சந்திர கிரகணத்தை  டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத்  பகுதிகளில் காணலாம். 

நாளை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..! எங்கிருந்து நேரடியாக பார்க்கலாம்?
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடுவதையும், சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவு உண்டு விடுவது நல்லது. சமைத்த உணவுகள் இருப்பின் அவற்றின் மேல் துளசி, தர்ப்பை புல் போட்டு வைக்கலாம். கிரகண நேரத்தில் வீட்டில் இறை நாமத்தை உச்சரித்தபடியே இருக்கலாம். கிரகண நேரம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். அதன்பிறகு குளிக்கும் நீரில் உப்பு , மஞ்சள் சேர்த்து குளித்து விட வேண்டும்.  நள்ளிரவில் கிரகணம் முடிவடைவதால் அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை வீட்டை சுத்தம் செய்து குளித்து விடலாம். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!