ரூ.14 கோடிக்கு சொகுசு பங்களா... மும்பையில் கலக்கும் தமிழ் பட நடிகை!

 
அடேங்கப்பா... ரூ.14 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய பிரபல தமிழ் பட நடிகை!

சுமார் ரூ.14 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கி மும்பையைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் ‘அனிமல்’ படத்தில் நடித்த நடிகை திரிப்தி டிம்ரி. 10, 15 படங்களில் நடித்து  ஹிட் கொடுத்திருக்கும் நடிகைகள் கூட இங்கே சென்னையிலேயே சொத்துக்களைக் குவிக்க தடுமாறி வரும் போது மும்பையில் சொகுசு பங்களா வாங்கியிருக்கும் நடிகை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் திரையுலகினர்.

‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த இந்தப் படம் அதீத வன்முறை, ஆணாதிக்க மனப்பான்மை ஆகியவற்றிற்காக கடும் விமர்சனங்களை இணைய வெளியில் எதிர்கொண்டது. பல பிரபலங்களே இந்தப் படத்திற்கு எதிராகப் பேசினர்.

இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தனர். 

அடேங்கப்பா... ரூ.14 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய பிரபல தமிழ் பட நடிகை!

இந்த உற்சாகத்தில், மும்பையின் பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ள கார்ட்டர் சாலையில் இரண்டு மாடி சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். இந்த சொகுசு பங்களாவின் சொத்து மதிப்பு ரூ.14 கோடி என சொல்லப்படுகிறது. 

பரிவர்த்தனைக்கு 70 லட்சம் ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பங்களாவின் மொத்த பரப்பளவு 2,226 சதுர அடி நிலப்பரப்பு மற்றும் 2,194 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியது. இதற்காக ஜூன் 3, 2024 அன்று பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web