சென்னையில் பரபரப்பு... விடுதலை சிறுத்தைகள் - புரட்சி பாரதம் கட்சியினர் மோதல்... பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

 
விருகம்பாக்கத்தில் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல்

சென்னையில் நேற்று விருகம்பாக்கம் பகுதியில் புரட்சிப் பாரதம் கட்சியினரின் பேனர் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், புரட்சி பாரதம் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் என 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web