மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுடன் 2 வது திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்!
பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என கூறும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019ல் வெளியான 'மெஹந்தி சர்கஸ்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
Mr & Mrs Rangaraj #madhampattyrangaraj ❤️ pic.twitter.com/kRSWAvbZ5n
— Joy Crizildaa (@joy_stylist) July 26, 2025
ஜாய் கிரிஸில்டா, திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர். இவர், 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். 2023ல் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மிக எளிமையாக கோயிலில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். தங்களின் திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
