மதிமுக காலி பெருங்காய டப்பா... அப்படியொரு கட்சி இருந்தா தானே உடைக்க முடியும்? திருப்பூர் துரைசாமி ஆவேசம்!

 
வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, அந்த கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கடந்த மாதம் 27ம் தேதி ஆறுபக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், "கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாறாமல் இருக்க, மதிமுகவை தாய்க்கட்சியான திமுகவில் இணைத்து விடுவது சம காலத்துக்கு சாலச் சிறந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். இக்கடிதம் மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சித்து வருவதாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கூறியிருந்தார். மேலும், ஜூன் 14ம் தேதி மதிமுக பொதுக்குழு கூடி, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று வைகோ, தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த பரபரப்புகளுக்கு இடையே, சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மே தின விழாவில், கலந்து கொண்ட வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது, கட்சி நிகழ்ச்சிகளுக்கு 2 ஆண்டுகளாக வராதவர். அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திற்காக அல்ல... நல்ல நோக்கத்திற்காக இருக்கவும் முடியாது. கட்சியில் 99.99 சதவிகிதம் பேருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மதிமுகவை, திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் தான் அவர்கள் உள்ளனர் என்றார். 

துரைசாமி

அவருக்கு (திருப்பூர் துரைசாமி) வேண்டுமானால் அந்த எண்ணம் இருக்கலாம். 30 ஆண்டுகள் நாங்கள் போராடி பயணித்து வந்து விட்டோம். எத்தனையோ கஷ்டங்களைக் கடந்து வந்து விட்டோம். இதையும் கடந்து போவோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கிறார்கள். நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயக முறைப்படி கட்சியின் தேர்தல் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான இடங்களில் அமைதியாக, ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு மேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச விரும்பவில்லை என்று வைகோ கூறினார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் திருப்பூரில் துரைசாமி நிருபர்களிடம் கூறும் போது, 'யாருடைய தூண்டுதலின் பேரிலும் மதிமுகவை  நான் உடைக்க முயற்சிக்கவில்லை. மதிமுக என்ற கட்சி இருந்தால் தானே அதை உடைக்க முடியும்? மதிமுக ஒரு காலி பெருங்காய டப்பா. அந்த கட்சிக்கு எதிர்காலமே கிடையாது. அந்தக் கட்சியில் இப்போதுள்ள இளைஞர்களின் நலன் கருதி, அதை திமுகவில் இணைப்பதே நல்லது.

வைகோ

நான் திமுகவில் இணைய போவதில்லை. ஆனால், அந்தக் கட்சிக்கு நான் ஆதரவு கொடுப்பேன், எனது நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வைகோ, என்னை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பிச்சவர் வைகோ. இப்போது அவரது வாரிசு வளருது. வாரிசுனாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காதுப்பா. நாம கிளம்புவோம் என்று புலம்பியபடியே அங்கிருந்த நிருபர்கள் கிளம்பியிருக்கின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web