மதுரை ஆதினம் காணொலி மூலம் விளக்கம் அளிப்பார்... செயலாளர் உறுதி!

மதுரை ஆதினத்தின் கார் விபத்தில் சிக்கியது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவரது சார்பில் செயலாளர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இது குறித்து மதுரை ஆதீனத்தின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து ஏற்கனவே மதுரை ஆதினத்திற்கு ஒருமுறை சம்மன் அனுப்பிய போது விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தான் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நேரில் தனது செயலாளர் வழக்கறிஞருடன் ஆஜராகுவார் எனவும் மதுரை ஆதீனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அமைந்துள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மதுரை ஆதீனத்தின் சார்பில் அவரது செயலாளர் செல்வகுமார் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் விளக்கம் அளித்து விட்டு வெளியே வந்த மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகி முழு விளக்கத்தையும் அளித்ததாகவும், சம்பவம் நடந்த ஆண்டு மதுரை ஆதீனம் என்ன பார்த்தாரோ அதைத்தான் சொன்னதாகவும் ஆனால் வதந்தி பரப்பப்படுவதாக கூறுவதாக அவர் தெரிவித்தார். மதுரை ஆதீனம் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவரது தரப்பில் இருந்து யாரேனும் ஆஜரானால் போதுமானது எனவும் அவர் தெரிவித்தார். 7 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், ஆதீனம் நீதிமன்றத்திற்கு அல்லது காவல் நிலையத்திற்கோ செல்லக்கூடாது என ஆணை இருப்பதாகவும் அதை நேரில் ஆஜராகி தெளிவுபடுத்தி விட்டு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். முழு விசாரணைக்கு அவர் சார்பில் நாங்கள் நேரில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் காவல்துறை அவகாசத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
((மதுரை ஆதினம் தமிழ் சமூகத்திற்கு ஆன்மிக பணியிலும் பொது பணியிலும் தன்னை அர்பணிக்கும் போது சில இடர்பாடுகளை தவிர்ப்பதற்கு 1880-ம் வருடம் மதராஸ் மாகாணம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அது இதுகாறும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது. அதன்படி ஆதினத்திற்கென்று மரபு வழியில் விலக்குதல் (Exemption) 2 என்பதை தெரிவித்து கொள்வதோடு, காவல் நிலையத்தின் அழைப்பானையை மதிக்கும் பொருட்டு, ஆதினத்தின் சார்பாக ஆதினம் நியமித்த பிரதிநிதி ஒருவர் நேரில் அழைப்பானைக்கான அதன் விளக்கத்தை தருவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேற்படி விசாரணையின் பொருட்டு விளக்கங்கள் தேவைப்பட்டால். ஆதினமே காணொலி மூலம் விளக்க தர தயாராக உள்ளார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும், கடந்த 03.07.2025-ம் தேதியன்று முறையான விளக்கத்துடன் கூடிய கடிதம், காவல்துறையின் உரிய உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையின் விசாரணைக்கு மேற்கூறியவாறு நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்பதனை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!