மதுரை ஆதீனம் சர்ச்சை பேச்சு... 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் மீது, சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் அவர் மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை அயனாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர்  மதுரை ஆதீனம் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது புகாரில், மதுரை ஆதீனம்  கருத்துக்கள்  சமூகத்தினருக்கு இடையிலான பகைமையையும் தூண்டும் விதமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுரை

அதன்படி  “கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது”, “இரு சமூகங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் செயல்”, “பொது அமைதியை பீதிகரமாக்கும் பேச்சு” மற்றும் “பொதுத் தூய்மை மற்றும் ஒழுங்கை பாதிக்கும் செயல்” ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை ஆதீனம், சில மாதங்களுக்கு முன், உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில், தன்னை திட்டமிட்டபடி கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், குல்லா அணிந்த நபர்  தாக்க முயற்சித்ததாகவும்  பேசியிருந்தார்.

மதுரை ஆதீனம்

இந்த பேச்சுகள் குறித்து அவரது உதவியாளர் ஒரு தனியார் கல்லூரி விழாவில் செய்தியாளர்களிடம் அதே தகவல்களை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த உரையாடலின் வீடியோ மற்றும் பதிவு  வலைதளங்களில் பரவிய நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

வழக்கறிஞர்  புகார் அளித்ததை அடுத்து, முதலில் சென்னை காவல்துறையால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.   இதற்கு மதுரை ஆதினத்தால்  வழங்கப்பட்ட விளக்கங்களை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கான விசாரணை விரைவில் தொடங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது