காணொலி மூலம் மதுரை ஆதீனம் ஆஜராக அனுமதி மறுப்பு!

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினம் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்பு விபத்துக்குள்ளான காரிலேயே அவர் சென்னை சென்றார். தன்னை கொலை செய்ய சதி என மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.
குறிப்பிட்ட மதத்தினர் மீது மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்பதும் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் அளித்தார்.
இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தார். மதுரை ஆதீனம் சார்பில் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராவதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதி மறுத்த போலீசார் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!