மதுரை ஆதினம்.... பாஜகவுடன் கூட்டணி அமைக்காததே அதிமுக தோல்விக்கு காரணம்!

 
மதுரை ஆதீனம்

 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ளது. 7 இடங்களில் டெபாசிட் இழந்தும், பல இடங்களில் 3 வது மற்றும் 4 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. மதுரையில் மதுரை 293 வது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்தியாவின் 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள  மோடிக்கு  வாழ்த்துக்கள்.  இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்ற வருத்தம் உள்ளது. மத்தியில் காங்கிரஸ்  ஆள முடியவில்லை. 3 வது முறையாக  வெற்றி பெற்றுள்ள  மோடிக்கு  என் சார்பில் 2  கோரிக்கைகளை  முன் வைக்கிறேன்.  
முதலில் இந்திராகாந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.  கச்சத்தீவை  மீட்டெடுத்து அதனை  தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும்.  அப்போது தமிழகத்தின் கடல் வளம் பெருகி மீன்வளம் அதிகரிக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்தலாம். அங்கு உள்ள  தமிழர்களுக்கு பிரதமர் மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் .
 கடும் பின்னடைவு... அதிமுக அதிர்ச்சி... இறங்குமுகத்தில் அதிமுக வேட்பாளர்கள்!
பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.  பாஜகத் குறைந்த தொகுதிகள் வெற்றி பெற்றதால் அக்கட்சி தோல்வியடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள். பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது எனக் கூறி இருப்பார்கள்.  ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்களின் தீர்ப்பு. 60 ஆண்டுகளாக ஆற்றில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற்ற முடிந்துள்ளது . பிரதமர் மோடி சிவபெருமானின்  தீவிர பக்தராகியுள்ளார்.மோடி உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார்.நான்  அவரை  ஆதரிக்கிறேன் .

மோடி அமைச்சரவை
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் படுதோல்வியை தழுவியுள்ளது.  அதிமுக கட்டமைப்பை  மேம்படுத்தவில்லை.  நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் நல்ல கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன் எனக் கூறியுள்ளார். அவருடைய இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web