நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை... மதுரையில் பரபரப்பு!

 
சித்திரை திருவிழா

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா விமரிசையாக உற்சாகமாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர் கோயிலுக்கு திரும்பியதுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. ஆனால் சித்திரை திருவிழாவின் போது பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவை தொடர்பான மோதல்கள் தான் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் சித்திரை திருவிழா மோதல் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரை திருவிழா

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சித்திரை திருவிழாவின் போது இவரது தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. பின்னர் இருதரப்பினரும் மோதல் போக்குடன் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர்.

இந்தநிலையில் ஆனந்தகுமார் நேற்று காலை தனது பைக்கில் மதுரை தெற்குவாசல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தகுமாரை வழிமறித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பைக்கை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார்.

எனினும் அவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிதள்ளினர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டனர்.

சித்திரை திருவிழா

விசாரணையில், நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web