மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரியில் நடைபெறும்... நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல்!

 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதியாக  உள்ள நிலையில், 2021ல் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்ரவரி2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. 
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. 27 நவம்பர் 2024ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. இதை தவிர்த்து இதர திருப்பணிகளுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்துவது என அறநிலையத்துறை நாள் குறித்திருந்தது. 

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடக் கோரி மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அறிக்கை அடிப்படையில் புது மண்டபத்தை புனரமைக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலில் புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிந்துவிடுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

இதற்கு பதிலளித்த கோவில் நிர்வாகம் அடுத்தாண்டு ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து கோயில் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?