ஜூலை 12 முதல் 'மகாராஜா' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் !

 
மகாராஜா

 தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியை அமைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனிமுத்திரை பதித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில் சமீபத்தில்  ‘மகாராஜா’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியானது.  விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ உலகம் முழுவதும் இதுவரை ரூ 100 கோடி  வசூல் சாதனை படைத்துள்ளது.   ‘மகாராஜா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற விதிக்கு ஏற்ப ஜூலை 12ம் தேதி ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மகாராஜா

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ’லட்சுமி காணாமல் போனதும், மகாராஜாவோட வாழ்க்கை தலைகீழாய் ஆயிருச்சு, தன்னுடைய வீட்டு சாமியை திருப்பிக் கொண்டு வர, மகாராஜா எவ்வளவு தூரம் போறாரு’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளது  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web