மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

 
அருண் காந்தி பேரன்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் பேரன் அருண் மணிலால் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. மொத்த இந்தியாவும் மகாத்மாவின் பேச்சைக் கேட்டது. ஆனால் அவரது மகன், அவர் பேச்சைக் கேட்கவில்லை என்கிற விமர்சனங்கள் பல வருடங்களாக இருந்து வருகிறது. மாகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்திக்கும் சுசீலா மஷ்ருவாலாவுக்கும் திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதிக்கு 1934ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தவர் அருண் மணிலால் காந்தி. 

அப்பாவைப் போல் அல்லாமல் தனது தாத்தா காந்திஜியின் அடிச்சுவடுகளை பின்பற்றி, அருண் மணிலால் காந்தி சிறந்த சமூக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் வாழ்ந்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூரில் வசித்து வந்த அருண் மணிலால், வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று  காலமானார். 


அருண் மணிலால் மறைவு செய்தியை அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி உறுதி செய்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று கோலாப்பூரில் நடைபெறுகின்றன.  

தேர்ந்த எழுத்தாளராக அறியப்பட்ட அருண் காந்தி, 2017ல் எழுதிய ‘த கிஃப்ட் ஆப் ஆங்கர் அண்ட் அதர் லெசன்ஸ் ஃப்ரம் மை கிராண்ட்ஃபாதர் மகாத்மா காந்தி’ உள்ளிட்ட புத்தகங்கல் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தன. தனது கட்டுரைகளில் அருண் காந்தி இந்திய அரசாங்கத்தையும் விமர்சித்திருந்தார்.

காந்தி பேரன்

அமெரிக்காவின்  நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் 2016ம் ஆண்டு வரை வசித்து வந்த அருண், பின்னர் இந்தியாவுக்கு திரும்பி மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியேறினார்.  இவருக்கு துஷார் என்ற மகனும், அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web