மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து புதிய அறிமுகம்... வெள்ளித்திரைக்கு வருகிறார் ஜான்வி ஸ்வரூப்!

 
மகேஷ்பாபு ஜான்வி ஸ்வரூப் மகேஷ்பாபு ஜான்வி ஸ்வரூப்

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு புதிய நடிகை வரவிருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணியில் திகழ்கிறார். இப்படத்திற்கு ‘வாரணாசி’ எனப் பெயர் சூட்டப்படலாம் என்றும், அதனைச் சுற்றி பல எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன.

மகேஷ் பாபு  ஜான்வி ஸ்வரூப்

இதற்கிடையில், மகேஷ் பாபுவின் அக்கா மற்றும் நடிகை-தயாரிப்பாளர் மஞ்சுளா கட்டாம்னேனியின் மகள் ஜான்வி ஸ்வரூப், நாயகியாக அறிமுகமாக உள்ளார். தொழில்நுட்ப துறையில் உயர் கல்வி பெற்றிருக்கும் ஜான்வி, தற்போது சினிமா துறைக்குள் நுழைய தயாராகி வருகிறார்.

மகேஷ்பாபு ஜான்வி ஸ்வரூப்

இதை அடுத்து, ஜான்வி ஸ்வரூப்பின் முதல் பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா தொடங்கி, பல தலைமுறைகள் இந்த குடும்பம் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பதால், ரசிகர்கள் ஜான்வியின் அறிமுகத்திற்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்போகிறார்கள் எனக் கருதப்படுகிறது. திரை உலகில் இன்னொரு ‘சூப்பர் ஸ்டார் வாரிசு’ வரவிருப்பது ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க