பராமரிப்பு பணிகள்... இன்றும், நாளையும் 66 ரயில்கள் ரத்து!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட்டாபிராம் மற்றும் அம்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று நவம்பர் 4ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூா், திருத்தணி செல்லும் 66 மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு செல்லும் 6 ரயில்களும், அரக்கோணம், திருத்தணியிலிருந்து இரவு புறப்படும் தலா ஒரு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை சென்ட்ரலில் பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயிலும், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 7.55 மணிக்கு வரும் ரயிலும் ஆவடியுடன் நிறுத்தப்படும். தொடா்ந்து, சென்னை சென்ட்ரல், கடற்கரை - ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி, பொன்னேரி இடையே அதிகாலை முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 58 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 3.30, காலை 7.40 மணிக்கும், பட்டாபிராமுக்கு அதிகாலை 4.15 மணிக்கும், திருவள்ளூருக்கு அதிகாலை 4.30, காலை 8.40, 9.15, 10 .00 மணிக்கும், அரக்கோணத்துக்கு காலை 6.30, 7.00, 8.20, 9.10, 9.50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மறுமாா்க்கமாக அரக்கோணத்திலிருந்து காலை 5.25, 6.20, 6.40, 7.10, 8.00, 8.50 மணிக்கும், ஆவடியிலிருந்து அதிகாலை 3.50, 4.25, 4.35, காலை 6.40 மணிக்கும், திருத்தணியில் இருந்து காலை 6.30, 7.00, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து காலை 6.50, காலை 7.15, காலை 7.40, காலை 9.10, காலை 9.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web