திரையுலகினர் அதிர்ச்சி... சந்தோஷ் சிவன் சகோதரர்... பிரபல இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்!

 
சங்கீத் சிவன்

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சங்கீத் சிவன் உடல்நலக் குறைவால் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 63. உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சங்கீத் சிவன் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார்.  

சங்கீத் சிவன்

மறைந்த இயக்குநர் சங்கீத் சிவன், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான சிவனுக்கு சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், சஞ்சீவ் சிவன் என 3 மகன்கள். சிவனின் மூன்று மகன்களுமே திரைத்துறையை சேர்ந்தவர்கள். இதில் சங்கீத் சிவன், மலையாளத்தில் ரகுவரன் நடித்த வியூகம், மோகன்லால் நடித்த யோதா, கந்தர்வம், நிர்மயம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்தியில் சன்னி தியோல் நடித்த ஸோர் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். மும்பையில் நேற்று காலமான சங்கீத் சிவனுக்கு மனைவி ஜெயஸ்ரீ, சஞ்சனா என்ற மகள், சாந்தனு என்ற மகன் உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web