ஸ்டாலின் புகழாஞ்சலி... இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர் காத்த மலையப்பன்!

 
மலையப்பன்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வருபவர் மலையப்பன் . இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று  மலையப்பன்  பள்ளி வாகனம் ஓட்டும்போது கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.  கடுமையான நெஞ்சு வலியுடன் மாணவர்களின் உயிரை நெஞ்சில் நிறுத்தி, வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, வாகனத்தின் இருக்கையில் இருந்தபடியே ஸ்டியரிங்கில்  சரிந்து விழுந்துள்ளார் மலையப்பன்.


பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலையப்பனை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை  பரிசோதித்த மறுத்தவர்கள் மலையப்பன்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மிகக் கடுமையான நெஞ்சு வலியுடன் மாணவர்களின் உயிரை காப்பாற்றி விட்டு, ஓட்டுநர் மலையப்பன் உயிரிழந்த சம்பவம் திருப்பூர்வாசிகளிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையப்பன்


இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து  தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோதிலும் இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு.  மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்" என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!