ஆண் - பெண் கொலை விவகாரம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை.. 7பேர் அதிரடியாக கைது!

 
மணிகண்டன் - பிரேமலதா

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தடங்கம் அருகே உள்ள வெத்தலகாரன்பள்ளம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில் கடந்த 24ம் தேதி ஆண் மற்றும் பெண் அடையாளம் தெரியாத உடல் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடந்தது. தகவலின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இருவரையும் வேறு இடத்தில் கொன்றுவிட்டு, சடலங்களை எடுத்து வந்து இங்கு வீசியது தெரியவந்தது. படுகொலை செய்யப்பட்ட 2 பேரின் படங்கள் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தர்மபுரி கொலை

தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பது தெரியவந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஆன்லைன் டிரேடிங் பிசினஸ் செய்த இவர்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கோவையை சேர்ந்த மை வி3 என்ற நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் கடந்த சில மாதங்களில் சுமார் ரூ.40 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் வேறு தொழில் செய்ய திட்டமிட்டுள்ளனர். அப்போது தேனியை சேர்ந்த தேவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலீட்டுப் பணத்தில் நிலம் வாங்குவது குறித்து அவரிடம் பேசியுள்ளனர். இந்நிலையில், தேவராஜ் தம்பதியிடம் பணம் பறிக்க திட்டமிட்டு அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில் தேவராஜ் நிலம் வாங்குவதற்காக மணிகண்டனையும், பிரேமலதாவையும் காரில் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றார். தேவராஜுக்கு தர்மபுரியை சேர்ந்த அஷ்வின் என்ற கார் டிரைவருடன் பழக்கம் இருந்ததால், தம்பதியிடம் பணம் பறிக்க திட்டம் தீட்டி அழைத்து வந்துள்ளார். அதன்படி அஸ்வின் 2 பேரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் தேனியில் இருந்து தேவராஜின் கூட்டாளிகள் 3 பேர் மற்றொரு காரில் சென்றுள்ளனர். போடி பகுதியில் சென்றபோது அஸ்வின் உள்ளிட்ட 3 பேர் சென்ற காரை மணிகண்டன் நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

கைது

ஆனால் இந்த ஜோடி ரூ.40 கோடி பற்றி பேச மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தேவராஜின் தரப்பினர், பணத்தை தெரிவிக்க மறுத்ததால், சரமாரியாக கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், உடல்களை எங்கு எடுத்து வீசுவது என்று தெரியாமல், ஒரு நாள் முழுவதும் உடல்களை காரில் வைத்துக்கொண்டு அலைந்தனர். பின்னர் அஸ்வின் தரப்பினர் 2 பேரின் உடல்களையும் காரில் எடுத்துச் சென்று தர்மபுரியில் வீசியது தெரியவந்துள்ளது. தேவராஜ் உள்ளிட்ட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web