ஜூன் 1ம் தேதி மாமன்னன் இசை வெளியீட்டு விழா!! ரஜினி, கமல் பங்கேற்பு?!

 
மாமன்னன்

தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகனாக நடித்திருக்கும் கடைசி திரைப்படம் “மாமன்னன்”. உதயநிதி தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் . ” ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகனாக நடித்து வருகிறார். அரசியலுக்கு வந்த பின் அமைச்சர் ஆகிவிட்டதால் மக்கள் பணி ஆற்ற கடமைப்பட்டவன். இதனால் இனி  சினிமாவில் நடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்தார்.

மாமன்னன்


மாமன்னன் படத்தை கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், வடிவேலு, பகத் பாசில் இருவரும்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

மாமன்னன்

உதயநிதி படத்துக்கு இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படத்திலிருந்து இதுவரை ராசா கண்ணு மற்றும் ஜிகு ஜிகு ரயிலு ஆகிய இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் ராசா கண்ணு பாடலை வடிவேலுவும், ஜிகு ஜிகு ரயிலு பாடலை ஏ.ஆர்.ரகுமானும் பாடி இருந்தனர். இரண்டு பாடல்களுமே வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் இந்த விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி நடித்துள்ள கடைசி படம் இது என்பதால், இதன் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web