அதிர்ச்சி வீடியோ... ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி... தொண்டர்கள் பதற்றம்!

 
மம்தா

 மீண்டும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த வீடியோ வெளியாகி தொண்டர்களைப் பதற்றமடைய செய்துள்ளது. 


மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 42 தொகுதிகளிலும் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று மதியம் அசான்சோல் தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக  தனி ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கிளம்பினார்.

மம்தா

பாசிம் பர்தமான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் பாதுகாவலர்கள் புடைசூழ அவர் ஏறினார். ஹெலிகாப்டரின் இருக்கையில் அவர் அமர முயன்ற போது, திடீரென நிலைதடுமாறி ஹெலிகாப்டருக்கு உள்ளேயே தவறி விழுந்தார். உடனடியாக அவருக்கு பாதுகாவலர்கள் உதவி செய்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web