குஜராத்தில் ரூ.10 கோடி பணத்தை பாகிஸ்தான் கிரிப்டோ கணக்குக்கு அனுப்ப உதவியவர் கைது!
குஜராத்தின் சூரத்தில் வசிக்கும் நபர் ஒருவர், இணைய மோசடி கும்பலுக்கு உதவி செய்து பாகிஸ்தானில் உள்ள கிரிப்டோ கரன்சி வாலெட்டிற்கு ரூ.10 கோடி அனுப்பியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் சைபர் குற்றப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
சிஐடி-கிரைம் பிரிவின் சைபர் செண்டர் வெளியிட்ட தகவலின்படி, சந்தேக நபர் சேதன் கங்காணி கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சைபர் மோசடிகள் பயன்படுத்தும் மியூல் வங்கி கணக்குகள் வழியாக இந்தியாவில் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பலுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நவம்பர் 3-ம் தேதி மோர்பி, சுரேந்திரநகர், சூரத் மற்றும் அம்ரேலி பகுதிகளில் இருந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுமார் 100 மியூல் கணக்குகள் மூலம் ரூ.200 கோடியை துபாயில் உள்ள சைபர் குற்றக் குழுவிற்கு அனுப்பியதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
சேதன் கங்காணி, அந்த கும்பலுக்கு ரூ.10 கோடியை USDT (Tether) கிரிப்டோ கரன்சியாக மாற்றி தனது BitGet வாலட் மூலம் பாகிஸ்தான் வாலெட்டுக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த பணப்பரிவர்த்தனை கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்றுள்ளது. அவர் ஒவ்வொரு USDT-க்கும் 0.10% கமிஷன் பெற்றதாகவும், அதற்கான முழு தொகை தெரிவிக்கப்படவில்லை என்றும் தகவல்.

இதற்கு தொடர்பான வழக்குகள் நாடு முழுவதும் 386-க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் கைது, வேலை மோசடி, முதலீட்டு மோசடி, கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு சைபர் மோசடிகளில் இந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் துணை முதல்வர் மற்றும் உள்துறை பொறுப்பு மந்திரி ஹர்ஷ் சங்கவி, “இந்த கைது, எல்லை தாண்டிய பெரிய சைபர் குற்ற வலையை முறியடித்த முக்கிய நடவடிக்கை. 7 அடுக்கு பரிவர்த்தனைகள் வழியாக பணப்போக்கை கண்காணித்து, பாகிஸ்தான் லிங்க் கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் உள்ள Binance USDT கணக்கு இந்தியாவிலிருந்து ரூ.25 கோடிக்கும் மேல் பெற்ற இருப்பதாகவும், தற்போது பிடிபட்ட இந்த கும்பல் முக்கிய ஆதாரமாக இருந்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் சைபர் பாதுகாப்பு குறித்து கவலை கிளப்பி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
