மனைவியின் சம்பளத்தை தர மறுப்பு... மாமியாரோடு குழந்தையையும் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

 
அன்னக்குட்டி
 வெளிநாட்டில் செவிலியராக பணிபுரியும் தன்னுடைய மனைவியின் சம்பளத்தை தர மறுத்த மாமியார் மீதும், மைத்துனரின் இரண்டரை வயதுக் குழந்தை மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர், அதன் பிறகு தப்பியோடி விட்டு தலைமறைவானார். 

கேரள மாநிலம் கொசுமலையில் வசித்து வருபவர் அன்னக்குட்டி (62). இவருக்கு லின்ஸ் என்கிற மகனும், பிரின்சி என்கிற மகளும் உள்ளார். பிரின்சிக்கு திருமணமான நிலையில் இத்தாலியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பிரின்ஸியின் கணவர் சந்தோஷ் கேரளத்தில் வசித்து வருகிறார். 
இந்நிலையில், பிரின்ஸியின் கணவர் சந்தோஷ், நேற்று மாலை தனது மனைவியின் சம்பள பணத்தை மாமியார் அன்னக்குட்டியிடம் தர சொல்லி கேட்டிருக்கிறார். அப்போது, ​​வீட்டுக்குள் இருந்த தனது பேத்தி லியாவை பிடித்துக் கொண்டு இருந்த அன்னக்குட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடனே வீட்டுக்குள் நுழைந்த சந்தோஷ், அன்னக்குட்டியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அன்னக்குட்டிக்கு முகம் மற்றும் மார்பில் 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.  
உடனடியாக சந்தோஷ் தீ வைத்து கொளுத்தியதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.  தனது போனை அண்ணன் சுகதன் வீட்டில் வைத்து விட்டு தலைமறைவானார். தீக்காயம் அடைந்த அன்னக்குட்டி, லியா ஆகியோருக்கு இடுக்கி மருத்துவக் கல்லூரியில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
இதையறிந்த அன்னக்குட்டியின் உறவினர்கள், செருதோணியில் சந்தோஷின் சகோதரர் சுகதன் நடத்தி வந்த ஹோட்டலை அடித்து நொறுக்கினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web