மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், அனுகூலபுரம், சுந்தர்ராஜ் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் சுயம்புலிங்கம் (43), இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுயம்புலிங்கம் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம்.
மேலும் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுயம்புலிங்கம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!