நாகூர் தர்காவில் பிரார்த்தனைக்காக சென்றவர் குளத்தில் மூழ்கி பலி.. பெரும் சோகம்!

 
நாகூர் தர்கா

 கேரளா மாநிலம், கொல்லம் கொளப்பாடம் பகுதியில் வசித்து வருபவர்   அப்துல் ரகுமான் மகன் நஜிமுதீன். 42 வயதாகும் இவர்  குடும்பத்தோடு நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்தார்.  இதனிடையே பிரார்த்தனைக்கு தர்கா குளத்தில் நஜிமுதீன் இறங்கி  உள்ளார். 
 திடீரென அவரது கால் தவறி குளத்தில் விழுந்துவிட்டார்.காப்பாற்றும்படி உறவினர்கள் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள்  அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் குடும்பத்தினர் கண் முன்பே குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

உடனடியாக  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு  வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி தேடியதில்  நீண்ட நேர தேடலுக்கு பின்னர் நிஜாமுதீன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.  அதன்பிறகு நாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரார்த்தனைக்காக வந்த இடத்தில் பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!