சாலையில் தூங்கியவர் மீது கல்லை போட்டு கொடூர கொலை.. போதை ஆசாமி வெறிச்செயல்!

 
பெங்களூரு கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் 7வது தெருவில் இன்று காலை ஒருவர் தலையில் கல்லுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் பனசங்கரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இந்த கொலை குறித்து பனசங்கரி போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவு ஒருவர் சாலையோரம் படுத்திருந்தார். அப்போது குடிபோதையில் இருந்தவர் படுத்திருந்தவர் மீது விழுந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சண்டை நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சாலையோரத்தில் கிடந்தவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த நபர் அங்கு வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web