தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கு தடை... அரசாணை வெளியீடு!!

 
மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !

தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிக்க  ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த  அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் மற்றும் விஷம் நிறைந்த வேதிப்பொருட்கள் கலந்து அவை செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து வெளியிட்ட  அரசாணையில் “ காத்தாடி பறக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துவது உண்மை தான்.

மாஞ்சா

இந்த காயங்கள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மரணத்தை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, மாஞ்சா நூல் எனப்படும் பிளாஸ்டிக் அல்லது செயற்கை நூலால் செய்யப்பட்ட காத்தாடி நூலின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும்.  பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை  மிக நீண்ட ஆயுட்காலம் மற்றும் இயற்கையில் மக்கும் தன்மை  குறைவாக அல்லது அறவே இல்லை.  இதனால்  தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, வடிகால் பாதைகள், ஆறுகள், ஓடைகள் போன்ற இயற்கை நீர்வழிகள் மற்றும் பசுக்கள் மற்றும் பிற விலங்குகளின் மூச்சுத் திணறல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  

மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !

இதன் அடிப்படையில் நைலான் அல்லது செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா அல்லது காத்தாடி பறக்கும் நூலுக்கு முழுத் தடை விதிக்கப்படும். நைலான், பிளாஸ்டிக் அல்லது பிரபலமாக அறியப்படும் ‘மாஞ்சா நூல்’ மற்றும் பிற செயற்கை பட்டம், பறக்கும் செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட காத்தாடி பறக்கும் நூலின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், வழங்கல், இறக்குமதி மற்றும் பயன்பாடுஅனைத்துக்கும் இதன் மூலம் முழுமையான  தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web