5 தலைமுறையா வாழற இடத்த விட்டு 15 நாளில் போகச் சொன்னா எங்க போவோம்... கதறும் மாஞ்சோலை தொழிலாளர்கள்!

 
மாஞ்சோலை

 திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில்  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்  மலை கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள்  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு  செயல்பட்டு வரும் தேயிலை நிறுவனத்தின் குத்தகை 2028ம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.அத்துடன் மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாஞ்சோலை
குத்தகை காலம் முடிவடையும் வேலையில் அப்பகுதியை விட்டு தேயிலை நிறுவனம் வெளியேற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  2028ம் ஆண்டு வரை கால அவகாசம் இருந்தாலும்  தேயிலை தோட்ட நிர்வாகம்  ஜூன் மாத இறுதிக்குள் தேயிலை தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை இங்கிருந்து காலி செய்யும் படி அறிவுறுத்தியுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஞ்சோலை மக்கள் நல சங்கத்தினர் அனைத்து கட்சிகளின் உதவியுடன் போராடி வருகின்றனர். கலெக்டரை சந்தித்து  மாற்று நடவடிக்கை எடுக்க முறையிட்டு வருகின்றனர். 
ஜூன் 14ம் தேதிக்குள் இவர்கள்  விருப்ப ஓய்வு தெரிவிக்கவில்லை என்றால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தேயிலைத் தோட்ட நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து   10க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால்  மாவட்ட ஆட்சியர் மனு அளிக்க வந்தவர்களிடம் குறைகளை கேட்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தேயிலை விவசாயி ஊட்டி கொடைக்கானல் நீலகிரி

இதனால்  வேதனை அடைந்த தோட்ட பணியாளர்கள், நிர்வாகத்திற்கு ஆதரவாக கலெக்டர் செயல்படுவதாக கூறினர்.  கலெக்டரே தங்களின் குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை.  அதற்கு பதிலாக தேயிலை தோட்ட நிர்வாகம் விருப்ப ஓய்விற்கு நல்ல தொகை கொடுக்கிறது. அதனைப் பெற்றுக் கொண்டு வெளியேறுங்கள். போராட்டத்திற்கு தூண்டாதீர்கள் என ஆட்சியர் பேசுவதாகத்   தெரிவிக்கின்றனர். இந்த தொழிலாளர்கள் “ நாங்கள் கடந்த  5 தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் பணி செய்து வருகிறோம். வெறும் 15 நாட்களில் எங்களை வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கே போவோம்” என கண்ணீர் வடிக்கின்றனர்.   முதல்வர் ஸ்டாலின் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்திற்கு ஆவன செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web