திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 
திருச்செந்தூர்
 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜையில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8-ந் தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கின. இந்த காலங்களில் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெறாது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

அதற்கு பதிலாக தினமும் மூலவருக்கு அலங்காரம், தீபாராதனை மட்டும் நடைபெற்று வருகின்றது. மேலும் மண்டல பூஜை காலங்களில் தினமும் மூலவருக்கு பதிலாக மூலவரின் உற்சவரான ஸ்ரீபெலிநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றது.

திருச்செந்தூர்

அனைத்து கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். ஆனால் திருச்செந்தூர் கோவிலில் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எனவே, ஆகஸ்டு 6-ந் தேதி வரை 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?