திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை தொடக்கம்... 30 நாட்கள் நடைபெறும்!

 
திருச்செந்தூர்
 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தேறியதை தொடர்ந்து மண்டல பூஜைகள் நேற்று தொடங்கியது. ஆவணி திருவிழா தொடங்க இருப்பதால், 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெற உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு ராஜகோபுரம் அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த யாகசாலை மண்டபத்தில் வைத்து 12 கால யாகசாலை பூஜையும், சுவாமி பெருமாளுக்கு 4 கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள், பெருமாள், நடராஜர் உள்ளிட்ட பரிவார மூர்த்தி கோபுர கலசங்களுக்கும் பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் நேற்று முன்தினம் காலையில் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. அன்று இரவு சுவாமி விநாயகர், சண்முகர், ஜெயந்திநாதர், குமரவடங்கப்பெருமான், அலைவாயுகந்தபெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பரிவார மூர்த்தி தெய்வங்கள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருச்செந்தூர் குடமுழுக்கு

மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் மண்டல பூஜை தொடங்கின. இந்த மண்டல பூஜை காலங்களில் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெறாது. தினமும் அலங்கார, தீபாராதனை மட்டும் நடைபெறும். நேற்று மூலவருக்கு பதிலாக மூலவரின் உச்சவரான ஸ்ரீபெலிநாதருக்கு அபிஷேக, அலங்கார, தீபாரதனைகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 31-வது நாள் ஆவணி திருவிழா ஆரம்பமாக உள்ளதால், 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?