வெளிநாட்டிலிருந்து மகள் புறப்பட்டார்... நாளை மன்மோகன்சிங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது!

 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து நேரில் சென்று விசாரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்


டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.

மன்மோகன் சிங்

தற்போது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டில் உள்ள மன்மோகன் சிங்கின் மகள், செய்தியறிந்து டெல்லிக்கு  புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், அவரிடம் ஆலோசித்த பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்

இருப்பினும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாளை டெல்லி ராஜ பாதை அருகே முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

 

 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web