ஆணவக்கொலை வன்முறை கிடையாது: பெற்றோரின் அக்கறை... நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!

 
ரஞ்சித்

ஆணவக்கொலை என்பது வன்முறை அல்ல அது பெற்றோரின் அக்கறை என நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

நடிகர் ரஞ்சித்தின் நடிப்பில் ‘கவுண்டாம்பாளையம்’ திரைப்படம் நேற்று வெளியானது. இதற்கு முன்பே படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிப்போனது. படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று படம் வெளியானதை அடுத்து சேலத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார்.

ரஞ்சித்

அவர் பேசியதாவது, “பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் அது நிச்சயம் பெற்றோர்களுக்கு வலி கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். அதனால், ஆணவக்கொலை அக்கறையினால் வரும் கோவம் தானே தவிர வன்முறை என்று சொல்ல முடியாது” என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

 நடிகர் ரஞ்சித்

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் நிலையில், நடிகர் ரஞ்சித் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு முன்பு காதல் மற்றும் சுயமரியாதைத் திருமணத்திற்கு எதிராகப் பேசி சர்ச்சையில் சிக்கினார் ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!