மன்சூர் அலிகானுக்கு ரூ1 லட்சம் அபராதம்.. நீதிமன்றம் அதிரடி..!!

 
மன்சூர்

நடிகர் மன்சூர் அலிகான் தனது விபரீத கற்பனைகள், கருத்துக்களால்  அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த வகையில்  லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.  இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா,  லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட பல  பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது   அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

திரிஷா - மன்சூர் அலிகான்

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானதில்  நடிகை  த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரி ட்வீட்டியிருந்தார்.   இந்த வழக்கில்  தனக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான்  மான நஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது  போன்ற பிரிவுகளில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார். அத்துடன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். 

மன்சூர் அலி கான்


இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ ஒரு லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.  2 வாரங்களுக்குள் அபராதத் தொகையை  சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.  பெண்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையிலும்,  விளம்பர நோக்கத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என  நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

From around the web