கட்டாயப்படுத்தி ஜூஸ் குடுத்தாங்க... ஐசியூ சிகிச்சையில் மன்சூர் அலிகான் அதிர்ச்சி அறிக்கை!
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று காலை முதல் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவர் குடியாத்தம் பகுதியில் பரப்புரை நடத்திய போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்பொழுது வரை ஐசியூவில் இருக்கும் மன்சூருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மன்சூர் அலிகான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேற்று குடியாத்தம் சந்தை பகுதியில் தனக்கு கட்டாயப்படுத்தி பழச்சாறு வழங்கப்பட்டது. அதனை குடித்த பிறகுதான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வண்டியில் இருந்து கீழே விழ இருந்த தான் மயக்கம் அடைந்து நெஞ்சுவலியில் துடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் தனக்கு வலி நிற்கவில்லை. அதனால் தான் சென்னைக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது ICUவில் இருக்கும் மன்சூர் அலிகானின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அனுமதித்த பிறகே அவர் வீடு திரும்பலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
