வித விதமாய் உருட்டி பல திருமணம்.. ஆண்களிடம் பலே மோசடி.. போலீசில் சிக்கிய சந்தியா!

 
சந்தியா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை ரோட்டில் பேக்கரி மற்றும் கால்நடை தீவன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், அவரது உறவினர்கள் திருமணத்திற்கு பெண் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30) என்பவர் 'அம்பி டேட் தி தமிழ் வே' என்ற இணையதள அப்ளிகேஷன் மூலம் இளம்பெண்ணை சந்தித்தார்.

திருமணம் கல்யாணம் கும்பம்

பின்னர் இருவரும் பழனி அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இளைஞரின் பெற்றோரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். மணப்பெண்ணுக்குத் தேவையான நகைகள், புடவைகள் அனைத்தையும் வாங்கி நன்றாகக் கவனித்துக் கொண்டனர்.வாலிபருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியும் சந்தியாவுக்கு வயது, தோற்றம் பொருந்தாததால் சந்தேகமடைந்து ஆதார் அட்டையை பார்த்தபோது சென்னையை சேர்ந்த மற்றொருவரின்  கணவர் பெயர் இருப்பதும், வயது பற்றியும் தெரியவந்தது. மேலும் பெயர் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டதையும் அறிந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரித்ததில், ஆத்திரமடைந்த அவர், வாலிபர் மற்றும் குடும்பத்தினரை மிரட்டினார். இதனால் பதற்றமடைந்த அந்த வாலிபர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். விசாரணையில், அந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் நடந்து குழந்தை இருப்பது தெரியவந்தது. இவர் கரூரில் டிஎஸ்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர், மதுரையில் மற்றொரு போலீஸ் அதிகாரி, கரூரில் நிதித்துறை அதிகாரி உள்பட 20க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலேயே சந்தியா கணவருடன் தகராறு செய்து நகை பணத்துடன் தலைமறைவானார். சந்தியாவின் திருமணப் பட்டியல் வித விதமாக நீண்டுகொண்டே செல்கிறது. சந்தியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை திருமணம் செய்து கொண்டு பல தொழிலதிபர்கள் தங்களிடம் இருந்த நகை பணத்தை தொலைத்துவிட்டு அதை பற்றி வெளியே கூற முடியாமல் திணறி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியின் மோசடி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web