வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு....பாரா ஆசிய போட்டிகளில் அசத்தல்!!

 
maariappan

அக்டோபர் 22 முதல் ஆசிய போட்டிகளை அடுத்து   பாரா ஆசிய போட்டிகள்  சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 28 வரை  நடைபெற உள்ளன.  4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 196 ஆண்கள், 113 பெண்கள் என மொத்தம் 309 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  2018ஐ காட்டிலும்  த பதிப்பில் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  

4 ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் 188 விளையாட்டு வீரர்கள் மூவர்ணக் கொடியைப் பிரதிநிதித்துவத்தில் கலந்து கொண்டனர்.  
2018 ல்  ஜகார்த்தாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 33 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 72 பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைத்தது.பெண்களுக்கான விஎல் 2 பிரிவில் கேனோயிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவ், 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான பதக்கப்பட்டியலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ஆடவருக்கான உயரம் தாண்டுதல்-T63 இல், ஷைலேஷ் குமார் தங்கமும், மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் பதியார் வெண்கலமும் வென்று மற்ற நாடுகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர்.இதுவரை பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். அதேபோல், மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!