அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு... அரசாணை வெளியீடு!

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தேவையின் அடிப்படையில் ரூ.5 லட்சம் பணத்தை திருமண முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசு ஊழியர்களின் நலன் கருதி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விதி எண் 110 கீழ் முதல் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் - ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இதை நடைமுறைப்படுத்தும் விதமாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண்களுக்கு 6,000 ரூபாயும் திருமண முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இனி தங்கள் திருமணத்தின் போது முன்பணமாக ரூ.5 லட்சம் முன்பணத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!