உயிரிழந்த காதலனைத் திருமணம் செய்து கொண்ட காதலி.. காதலனின் தாயை கவனித்துக் கொள்ள முடிவு!

 
காதலி

சாலை விபத்தில் உயிரிழந்த காதலனத் திருமணம் செய்து கொண்ட காதலி, தனது காதலனின் தாயைக் கவனித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறாள். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தைவான். இந்தப் பகுதியில் யூ என்ற இளம்பெண் வசித்து வருகிறார் இவர்   ஜூலை 15ம் தேதி தன்னுடைய காரில் தனது காதலனுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது அடுத்தடுத்து  வந்த 4 கார்கள் ஒன்றுக்கொன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் யூ வின் காதலர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

அத்துடன்  யூ வுக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தனது காதலனை இழந்த யூ மன வேதனையில் இருந்து வந்தார். தனது காதலனின் திடீர் இறப்பை  ஏற்றுக் கொள்ள முடியாத யூ தனிமையில் வாடி வந்தார்.  

ஆனால்  தனது காதலரின் தாயை கவனித்துக் கொள்வதற்காகவும், இறந்த காதலனை நினைவு கூறும் வகையிலும்  யூ  திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதற்காக  சீனாவில் உயிரிழந்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் முறைப்படி தன்னுடைய காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இத்தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. .யூ வின் மனிதாபிமான செயலை  பலரும் பாராட்டி வருகின்றனர்.  மேலும் இந்தப் பதிவில் ஒருவர் காதலனின் தாயை காப்பாற்ற நினைக்கும் இந்த துணிச்சலான பெண் மிகவும் திறமையானவர் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web