திருமணமான பெண்கள் தான் டார்கெட்.. காதலித்து ஏமாற்றி வந்த இளைஞர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் ஜாகீர் உசேன் (23). ஜாகீர் உசேனுக்கும், சென்னையில் பணிபுரியும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அறிமுகம் படிப்படியாக காதலாக மாறியது. இதையடுத்து ஜாகீர் உசேன் 14 பவுன் நகை மற்றும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் பெற்றுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளப் போவதாக நம்பி நகை, பணத்தையும் இளம்பெண் கொடுத்துள்ளார். பின்னர், ஜாகீர் உசேன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து செல்போனில் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவர் விரும்பும் போதெல்லாம் தனது காதலியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு காதலி மறுத்தால், தனது ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி, பலமுறை அவளுடன் உடலுறவு கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் கர்ப்பமானார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஜாகூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். இதனால் இளம்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த இளம்பெண் மீது குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இளம்பெண்ணுக்கு ஆதரவாக மகளிர் காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜாகீர் உசேன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், ஜாகீர் உசேனால் ஏமாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில், ஜாகீர் உசேன், திருமணமான பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் உடலுறவு வைத்து, ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகை பறித்தது தெரியவந்தது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!