உஷார்... பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்... வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்!

அதிலும் குளிர்ந்த பகுதிகளிலும் மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களிலும் இந்தப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பீதி அடையாமல், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் உள்ளவர்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டால், அதன் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
